• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்..,

இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்ததுடன் , வடக்குஇலந்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்ததுடன் அங்கு அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் திரு கருப்பசாமி தலைமை வகித்தார், கயத்தாறு பேரூர் கழக செயலாளர் திரு சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாகலாபுரம் வெயில்முத்து பாண்டியன்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வெயில்முத்து, மத்திய ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் எட்டு ராஜ், இளைஞர் அணி கருணாநிதி, ராஜாபுது குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார், வடக்கு இலந்த குளம் ஊர் நாட்டாமை, இளைஞர் அணியினர்,பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.