• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடல் போல் காட்சி அளிக்கும் வைகை

Byகுமார்

Nov 11, 2021

வைகை அணைக்கு வரும் நீர் மொத்தமாக வெளியேற்றப்படுவதால் வைகையில் 3569 கன அடி நீர் மதுரையை கடந்து செல்கிறது.

வைகை அணையின் மொத்தக் கொள்ளளவு 71 கன அடி, தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69.29 கனஅடியாக உள்ளது.

எனவே வைகை அணைக்கு வரும் நீரின் வரத்தை முழுமையாக பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். தற்போது வரும் நீரின்வரத்து 3569 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் வைகை நதி மதுரை மாநகர் பகுதி வழியாக 13 கிமீ தூரம் பயணிக்கிறது.

இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள கரையோர மக்களுக்கு காவல்துறையினர் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், அனைத்து பாலங்களில் கரையோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும் வைகை ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்து வருகின்றனர்.