• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை

Byகாயத்ரி

Nov 11, 2021

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்க இருக்கிறது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு சாலைகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (12ம் தேதி) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கனமழை காரணமாக ஏற்கெனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், மழை தொடர்வதால் மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.