• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாலையில் புதைந்த அரசு பேருந்தின் சக்கரங்கள்

BySeenu

May 19, 2024

கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் வரைக்கும் செல்லக்கூடிய TN 38N 2859 எண் கொண்ட பேருந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சக்கரம் சிக்கிக் கொண்டது. அண்மையில் பாதாள சாக்கடை போடுவதற்கு சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடித்து பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துறையினர் கிரேன் மூலம் பேருந்தை மண்ணில் புதைந்த பேருந்து மீட்டனர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.