• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் மதுரையில் சந்திப்பு விழா

ByN.Ravi

May 16, 2024

ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து, சந்தானம் நடிக்கும் புதிய படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இப்படத்துக்கு, ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, மறைந்த நடிகர் மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பாலசரவணன், ’லொள்ளு சபா’ மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, ஜி.என்.அன்புச்செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச்செழியன் ஆகியோர் கோபுரம் பிலிம்ஸ் என்ற பேனரில் தயாரித்தனர்.
இதில், எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். தியாகராஜன் எடிட்டிங் பணிகளை செய்தார்.
பாடல் வரிகளை, விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ,மே.17- ல் உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் சார்பில், மதுரையில் ரசிகர்களை சந்திக்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் சந்தித்து குழு புகைப்படங்கள் எடுத்துகொண்டு கலந்துரையாடினார்.