• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.3,500 அபராதம்

Byதரணி

Apr 22, 2024

திண்டுக்கல், வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த சுகுமார் என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள், சுகுமாருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.