• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெல் நிறுவன சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

Byவிஷா

Apr 20, 2024

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல பெல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியில் பிரபல நிறுவனமான பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
ரேவந்த் ரெட்டி இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.