• Sun. May 5th, 2024

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி

BySeenu

Apr 21, 2024

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி. தமிழக – கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டு கால்நடை பராமரிப்பு துறையினர் இரண்டாவது நாளாக வாளையார் தோதனை சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது.

இந்த இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில் எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் கேரளாவில், பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்பட 12 சோதனைச்சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்களை கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் கால்நடை பராமரிப்பு துறையினர் இரண்டாவது நாளாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *