• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கும்மி அடித்து வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்

ByBala

Apr 17, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி, அம்மாபட்டி, புதுசுரங்குடி, ஓ. மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் அதிமுக தேமுதிக கூட்டணி கட்சியினர் யாரை பிரதமராகுவது என்ற குழப்பத்தில் உள்ளதாகவும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார் என தெரிவித்தார்.

இதையடுத்து புதுச்சூரங்குடி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார் அப்பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பெண்களுடன் கும்மியடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.