நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல் தலைமுறை இளைய வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களுக்கு நாமக்கல் மேற்கு மாவட்டம் மதுரா செந்தில் உத்தரவின் பேரில் பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம் தலைமையில்
முன்னாள் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்
தியாகு வெங்கடேஷ் கந்தசாமி,அக்னி கார்த்திக்,கௌரி,ஶ்ரீனி,உள்ளிட்ட திமுக இளைஞர் அணியினர், கல்லூரி மாணவர்கள், முதல் தலைமுறை 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் வெப்படை பகுதியில் உள்ள வீடுகள் கடைகளுக்கு நேரடியாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து திமுகவிற்கு வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறும் நிலையில், திமுகவினர் தங்கள் தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..