• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம்

ByN.Ravi

Apr 3, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு திண்டுக்கல் ஐ.லியோனி தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசிய லியோனி எளிய கதைகளுடன் கோர்வையாக பேசி வாக்குகள் கேட்டது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.
இதில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன் மாறன், பால ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் எஸ். எஸ்.கே.ஜெயராமன், பால்பாண்டியன், துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்திக், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்,
பேரூர் துணை செயலாளர் சோழவந்தான் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.