• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை பாராளுமன்ற தொகுதியில் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பிரச்சாரம்

BySeenu

Mar 30, 2024

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர். இந்த நிலையில் அங்கு சாலையில் நேற்று இருந்த அவரது காரில் அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். காரின் பின்புற கதவை திறந்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.