

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருமலை நாகராஜ் மற்றும் அம்மா பேரவை செயலாளர் குமார் உள்ளிட்ட அமமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

