• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விபதில்லா பட்டாசு தொழிலாக மேன்மையடைய சிவகாசியில் 2 நாட்கள் சிறப்பு யாக பூஜை

ByG.Ranjan

Mar 29, 2024

நூற்றாண்டை எட்டியுள்ள பட்டாசு தொழில், கடந்த சில வருடங்களாக உச்சநீதிமன்ற வழக்கு பிரச்சனையில் சிக்கி, பட்டாசு தயாரிக்க தேவையான முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு தடை, சரவெடி உற்பத்தி கூடாது, பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு, என்பது போன்ற நீதிமன்ற உத்தரவினால் தவித்து வருகிறது.

பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்கிலிருந்து பட்டாசு தொழிலை மீட்டெடுக்கவும், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மேலும் ஏதும் விபத்துகள் தொடரா வண்ணம் உயிரிழப்புகளை தடுக்கவும், சிறப்பு யாகங்களுடன், ஹோமம் நடத்தி, கோ பூஜை செய்யப்பட்டது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க திருமண மண்டப வளாகத்தில் நடந்த பூஜைகளில், உற்பத்தியாளர்களுடன், தொழிலாளர்களும், பங்கேற்றனர்.