• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கைதை கண்டித்து, நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் இந்திய கூட்டணியின் சார்பில், ஒன்றிய அரசின் எதிர் கட்சிகள் மீது பழிவாங்கும் அரசியல் அடக்குமுறைக்கு எதிராக. நாகர்கோவிலில் மாநகராட்சி பூங்காவிற்கு எதிராகவும், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் கைதை கண்டித்தும், பாஜகவின் தோல்வி பயத்தால், எதிர்கட்சிகளின் மீது அரசியல் பழி வாங்க நடக்கும் ஜனநாயகம் அற்ற பிரதமர் மோடியின் செயலை கண்டித்து, இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மகேஷ், திமுக நாகர்கோவில் மாநகர செயலாளர், ஆம்ஆத்மி கட்சியின் மண்டல செயலாளர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உசேன், மதிமுக வின் மாவட்ட செயலாளர் வெற்றிவேல். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவின் செயலாளர் அந்தோணி மற்றும் ஏராளமான கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.