பேரழகனே..,
நீ இல்லாமல்
நான் கடந்து போகும்
ஒவ்வொரு மணித்துளியும்
பாறையென கனத்துப்போகிறது...
உந்தன் குரல் கேட்காது
என் கவிதை நந்தவனத்து
சொற்பூக்களும் சொற்பமாய்
விடுமுறை கேட்டு விடைபெறுகிறது…
வரிகளில் வண்ணத்தை பூசிடும்
வண்ணத்துப்பூச்சியும்
வழிமாறி பறக்கிறது
வலிக்கும் மனதோடு….
வெள்ளையடித்து
காத்திருந்த வெற்றுத் தாளும்
என்ன எழுதிவிடப் போகிறாய்?
என ஏளனத்தோடு கேட்கிறது….
என் பேரழகனே..,

கவிஞர் மேகலைமணியன்
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)