• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாலமேட்டில் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேட்டில் அமைந்துள்ள
ஸ்ரீ வீரம் மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் நாள் மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோவில் கருவறையில் அமைந்துள்ள
ஸ்ரீ வீரமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு
சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை, சக்தி விநாயகர் ஆலய அர்ச்சகர் ஸ்ரீதர் நடத்தி வைத்தார். ஐயர், விழா ஏற்பாடுகளை, குணசேகரன், மற்றும் கணேசன், உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.