

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.64.05/-( ரூபாய் அறுபத்து நான்கு இலட்சத்து ஐயாயிரம் மட்டும்) மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல் தளத்துடன் கூடிய நான்கு வகுப்பறைகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியின் வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, யா.ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர்சாமி, பொற்செல்வி மற்றும் கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, மதுரை கிழக்கு ஒன்றியப் பெருந்தலைவர் மணிமேகலை ராஜேந்திரன் மற்றும் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், கட்டிடப் பணியாளர்கள் நாகராஜன் கௌரவிக்கப்பட்டனர். முடிவில், தலைமை ஆசிரியை மாலா நன்றி கூறினார். விழாவில், ஊராட்சி துணைத் தலைவர் ரவி, ஊராட்சிச் செயலர் சாதிக் பாட்சா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் சரோஜா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபத்மா, கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் குமரன், காலை உணவுத் திட்டப் பொறுப்பாளர்கள் ராஜாத்தி, ஃபாத்திமா, அன்னலட்சுமி, சுந்தர், காளிதாஸ், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், துப்பரவு பணியாளர்கள், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப், பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

