• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை மத்திய சிறைவாசிக்கு கஞ்சா வழங்கியதாக சிறைக்காவலர் சஸ்பெண்ட் – சிறைத்துறை நடவடிக்கை

ByKalamegam Viswanathan

Feb 13, 2024

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற வழுக்கை கார்த்திக் (26) கஞ்சா வழக்கில் 2 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்நிலையில் வழுக்கை கார்த்தியிடம் சிறையில் வைத்து இரு நாட்களுக்கு முன் 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழுக்கை கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் சிறை காவலர் ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்து கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிறைக்காவலர் ஆனந்தராஜை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.