• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நாளை தை அமாவாசை : மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்து

Byவிஷா

Feb 8, 2024

நாளை தை அமாவாசையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக, பிப்ரவரி 9 ஆம் தேதி நாளை முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை,, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
அதனைப் போலவே தை அமாவாசையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.