பேரழகனே..,
என் மனம் எனும் யன்னலினூடே
மின்னலாய் நுழைந்தவனே…
தென்றலாய் வீசிக்கொண்டிருந்த
இதயத்தில் சுனாமி வீசச்செய்தவனே..
என் கனவில் நீ வந்து கன்னத்தில் இட்ட
முத்தம் கற்கண்டாய் தித்தித்து
இன்னும் ஈரப்பதமாகவே இருக்கிறது தெரியுமா??
உன் மீது நான் கொண்ட நேசிப்பை வார்த்தை கொண்டு வர்ணிக்க தெரியாத
ஊமையாகிப் போன பேதை நான்
இப்போது..
மனத்தில் எழும் ஓசைகள் கூட இயற்கையோடு கலந்துவிட்ட கானம் போல பயனில்லாமலே போய்விட்டது…
உன் வெளிப்படையான பேச்சினாலே
என்னை சிறைபடுத்தியவனே..
அதில் ஆயுள் கைதியாக இருக்கவே
ஆசைப்படுகிறேன் என்றும் எப்போதும்
எனக்குள் மாற்றங்களை தந்துவிட்டு
எப்படி தான் ஒன்றும் தெரியாதவன் போல நடிக்கிறாயோ??
உன் காதலில்லாத வாழ்வு இங்கு எனக்கு
கசக்கின்றது
உன் நிஜம் என்னை சுடுகிறது…
அதனால் என் மனதும் கனக்கின்றது..!

கவிஞர் மேகலைமணியன்