• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

*ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியிடை நீக்கம் தவிர்க்கப்படும் – தமிழக அரசு*

Byமதி

Oct 30, 2021

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியிடை நீக்கம் என்ற நடைமுறை தவிர்க்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெறும் நேரத்தில் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வு பெறும் நாளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யப்படும் ஒரு சூழல் ஏற்படும் போது அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அவர்களுக்கு சலுகைகள் அனைத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை தவிர்க்கக்கூடிய வகையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஓய்வு பெறக்கூடிய காலத்தில் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அதற்கான பாதிப்பை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.