• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் குடியரசு தினவிழா..!

Byவிஷா

Jan 26, 2024

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். தற்போது கொடியேற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் முப்படை வீரர்கள், பள்ளி கல்லூரி தேசிய மாணவர் படையினர் , உள்ளிட்ட பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மத நல்லிணக்க விருது, தமிழக அரசின் சிறப்பு விருது, வீர தீர செயல்களுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.