• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி…

Byமதி

Oct 30, 2021

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நேற்று மாரடைப்பு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு கண்டீரவா ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ரசிகர்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வந்த படியே உள்ளனர்.

மேலும் கண்டீராவா மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவரது மகள் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன், அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் இரங்கல் செய்தியை தெரிவித்து இருக்கிறார். அதில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.