• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஜாக்டோ ஜியோ சார்பில், உசிலம்பட்டியில் ஆலோசனை கூட்டம்

ByP.Thangapandi

Jan 22, 2024

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், அரசாணை 243 -யை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜியோ சார்பில் வரும் 27ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிர போராட்டமும், வரும் 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்தையும் நடத்த அறிவித்துள்ளது.

இந்த இரு போராட்டங்கள் குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வள மையத்தில் உசிலம்பட்டி வட்டார ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜியோ அமைப்பு ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் உரிமைக்கான இந்த போராட்டங்களில் அனைவரும் கலந்து கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.