• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி..!

Byவிஷா

Jan 11, 2024

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவை ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெல்லி, காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதன் அதிர்வலை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 என்ற அளவுகோளில் நிலநடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானின் லாஹ_ர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்கவா உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.