• Sun. Apr 28th, 2024

டெல்லியில் வாட்டும் குளிர் : ஜன.12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Jan 8, 2024

டெல்லியில் கடுமையான குளிர் வாட்டி வருவதால், அங்கு ஜனவரி 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்விததுறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, டெல்லி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..,
குளிர் கடுமையாக இருப்பதன் காரணமாக டெல்லியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான நர்சரி பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 1-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு இன்று திங்கள்கிழமை (ஜன.8) திறக்கப்பட இருந்தது. ஆனால் குளிரின் தாக்கம் குறையாத காரணத்தால் இந்த விடுமுறையானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கவுதம்புத் நகரில் மாவட்ட நிர்வாகம் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில் சாலை முழுவதும் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம், பஞ்சாப், அரியானா, டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் குளிரானது கடுமையான குளிராக மாறி அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும். பின்னர் படிப்படியாக குறையும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *