• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Byகுமார்

Jan 11, 2024

மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் மரகத லிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது.
மேலும் இது குறித்து மாநில பொதுச் செயலாளர் சுவாமிநாதன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் 4-அம்ச கோரிக்கை களான நீண்ட காலமாக தற்காலிக பணி நீக்கம், கிடங்கு பணி, மாவட்ட பணியிட மாறுதல் பெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு மூலம் பணி வழங்கிடுதல், பணி நிரவலில் உள்ள குறைபாடுகளை களைத்திடுதல், ஏபிசி சுழற்சி முறை பணியிட மாற்ற கொள்கையை அமுல்படுத்துதல், தமிழகத்தில் சில பிரச்சனைகள் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட மூடப்பட்ட கடை பணியாளர்களை கலந்தாய்வில் சேர்க்காமல் உடனடியாக கடைப்பணி வழங்கிடுதல் உள்ளிட்ட 4- அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது எனக்கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கண்ணையன், மாநிலச் செயலாளர்கள் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு பேரூராட்சிகள் சங்கம் மாநிலத் தலைவர் பிச்சை முத்து, முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 4-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.