• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸ் திடீர் சோதனை..!

Byவிஷா

Jan 11, 2024

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள நிலையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.