• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடியுடன் போராடிய மாணவர்கள் கைது..!

Byவிஷா

Jan 11, 2024

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வருகையைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் பெற்ற பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சந்தித்து பேசுவதற்காக சேலம் சென்றுள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஆளுநர் சந்திக்க வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கூட்டமைப்பினர் இன்று காலை முதல் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ஆளுநரே வெளியே போ.. ஆளுநரே திரும்பிப் போ.. என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் வாகனங்கள் கொண்டு வந்து கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.