• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை புறக்கணிக்கும், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி

ByP.Thangapandi

Jan 6, 2024

முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் அதிமுக நிகழ்வுகளை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரையும் புறக்கணித்து வருவதாக சர்ச்சை கிளம்பி இருக்கின்றது .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளராகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்த பா.நீதிபதி., கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் தனக்கு சீட் கொடுக்கவில்லை என்ற வருத்ததால், அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட தற்போதைய எம்எல்ஏ அய்யப்பனுக்காக ஒரு பிரச்சாரம் கூட செய்யாமல் புறக்கணித்தது அனைவரும் அறிந்ததே., கட்சி தலைமையிடம் உடல்நலக்குறைவை காரணம் காட்டி தொடர்ந்து உசிலம்பட்டி ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்தவர்.,

உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ஓபிஎஸ் ஆதரவாளராக அவரிடம் சென்றதுமே, உசிலம்பட்டி அதிமுக நிர்வாகிகளுடன் உறவாடிக் கொண்டு மீண்டும் அதிமுகவின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.,

இந்நிலையில் தற்போது அமமுகவில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவான இ.மகேந்திரன் அதிமுகவில் இணைந்த நிலையில் எப்போதும் போல முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி அதிமுகவின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பு செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. அவர் மட்டும் கலந்து கொள்ளாமல் இருப்பதை போன்று அவரது ஆதரவாளரான ஒரு சில அதிமுக நிர்வாகிகளும் இதே பாணியை கடைப்பிடித்து வருவது வேடிக்கையாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயக்குமார் வந்தால் கூட அவரது நிகழ்ச்சியை முன்னாள் எம்எல்ஏ நீதிபதி புறக்கணித்து வருவதால் ஒன்றிய செயலாளர் பதவியில் அவர் இருக்கிறார என்றும், ஒரு புறம் எம்எல்ஏ அய்யப்பன் ஒபிஎஸ் அணிக்கு சென்றது, முன்னாள் எம்எல்ஏ இ.மகேந்திரன் இணைந்தது, முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மீண்டும் அதிமுகவை புறக்கணிப்பது என்ற நிகழ்வுகள் உசிலம்பட்டி அதிமுகவில் பேசு பொருளாக உள்ளது.