• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது.

இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை தாங்கினார்.சிறுத்தை பாலன், வாடிப்பட்டி வளவன்,யுவராஜா, அருண் பாண்டி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்தப் போராட்டத்தில் மாநில துணைசெயலாளர் பொறியாளர் தமிழ் நிலவன்,மாவட்டத் அமைப்பாளர் தளபதி, செல்லக்கண்ணு,வெங்கடேசன், விஷ்ணு,பாலமுருகன் செல்வம் நாகமுத்து ராஜ்குமார் விஜிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் மறியல் போராட்டம் செய்தவர்களை கைது செய்தனர்.