• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஆளுநர் இல.கணேசன் வாகனம் செல்லும் வழியில், தீக்குளித்த நபரால் பரபரப்பு.., காவல்துறையினர் விசாரணை…

ByKalamegam Viswanathan

Jan 2, 2024

மதுரை மாநகர் மடீட்சியா ஹாலில் இன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை மாநகர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் தங்கு விடுதியில் ஓய்வெடுக்க செல்வதற்காக ஆளுநர் வாகனம் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

இந்நிலையில் ஆளுநர் இல.கணேசனின் கான்வாய் செல்லும் பகுதியான கே கே நகர் வக்பு வாரிய கல்லூரி எதிரில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் திடிரென தின்னரை ஊற்றி தீயை பற்ற வைத்தபடி சாலையில் ஓடிவந்த நிலையில் தீக்குளித்தார்.

இதனால் உடலில் தீப்பற்றிய நிலையில் அங்கும் இங்கும் கதறியபடி ஓடிய நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

48 வயது மதிக்கத்தக்க அந்த நபர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீக்குளித்த நபர் மதுரை பாசிங்காபுரம் கண்ணன் என்பது, காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரையில் ஆளுநரின் வாகனம் செல்லும் வழியில் தீக்குளித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.