• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கிருஷ்ணாமஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், தாசில்தார் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் வரவேற்றார். இந்த முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக் மற்றும் பேரூராட்சிகவுன்சிலர்கள், பணியாளர்கள், வருவாய்ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் அந்தந்த துறைவாரியாக பெறப்பட்டது. முடிவில் செயல் அலுவலர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.