கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 47-குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மட்டும் அல்லாது, தெருவிலும் இடுப்பு அளவு மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில், சுனாமி குடியிருப்பு குடும்பங்களுக்கு நாடாளுமன்ற நிகழ்விற்காக டெல்லியில் இருக்கும் போது 47 சுனாமி குடியிருப்பு வாசிகளுக்கு குடும்பம் ஒன்றிற்கு 10கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் வழங்கினார்கள்.
நேற்று பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் முடிந்த உடன் இன்று தொகுதிக்கு வருகை தந்த விஜய் வசந்த் எம். பியிடம் கோவளம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 7_நாட்கள் கடந்தும், 4_ங்கு டீசல் பம்ப் வைத்து இரவு, பகலும் நிற்காது பம்ப் ஓடியும் தண்ணீர் குறையாது இன்னும் தண்ணீர் தேங்கி வடியாமல் மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் இருப்பதை தெரிவித்தனர்.
உடனடியாக கோவளம் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மழைக்காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், கோவளம் தலைமை பங்கு தந்தை ஜார்ஜ், கோவளம் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர் ராயப்பன் மற்றும் இளங்கோ, லிங்கம், ஜேசுஜெனீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




