• Mon. May 20th, 2024

அருமனை “கிறிஸ்துமஸ்”கர்நாடக முதல்வர் சித்தாராமையா தனி விமானத்தில் வருகை…

தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் காண முடியாத அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒரு தனித்த சிறப்பு விழாவாக, அன்று தொட்டு இன்று வரை சிறப்பு பெற்ற விழா.

குமரி கடற்கரை 47_ மீனவ கிராமங்கள் ஒவ்வொன்றிலும் வான் தொடும் கோபுரத்தின் உச்சியில் சிலுவை தாங்கிய தேவாலயங்கள் மட்டும் அல்லாத நகர பகுதிகளில் வான் தொட முயலும், தென்னை மரங்களோடு போட்டி போட்டு தேவாலையத்தின் சிலுவை தாங்கிய கோபுரங்கள் எல்லாம் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை வண்ண, வண்ண கண் சிமிட்டுகள் போல் மின்னும் ஒளி விளக்குகள்.

தேவாலைய ஒளி விளக்கோடு போட்டியிடும் வகையில்.கன்னியாகுமரி முதல், களியக்காவிளை வரை மாவட்டத்தின் எட்டு திசைகளிலும் சின்னதும், பெரியதுமாக இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்ற அடையாள குடில்களும் மின் ஒளியில் மின்னல் போல் தொடர, இதற்கு அடுத்த காட்சியாக வீடுகளில் மட்டும் அல்ல மரங்களில் வான் நட்சித்திரத்தை மிஞ்சும் எண்ணிக்கையில் செயற்கை நட்சத்திர விளக்குகள் என்ற காட்சிகளின் வரிசை.

குமரியில் கிறிஸ்துமஸ் விழா நெருங்க,நெருங்க, இந்த ஆண்டு அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினர் எந்த மாநிலத்து வி.வி.ஐ.பி., என்ற தேடலில் அருமனை ஸ்டீபன் குழுவினர் தேடலும், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின் நிகழ்ச்சிகள் 22_ம் தேதி மாலை இறை ஆசீர் வார்த்தைகளோடு தொடங்கியது.

அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய கொண்டாட்ட தினமான (டிசம்பர்_23) நாள் விழாவில் பங்கேற்க கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் திருவனந்தபுரம் வருகிறார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், டாக்டர்.செல்லகுமார்,அருமனை கிறிஸ்துமஸ் விழாவின் ஒருங்கிணைப்பாளர் அருமனை ஸ்டிபன் இவர்களோடு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் செயலாளர் கே.ஜி.ரமேஷ்குமார் வரவேற்று. சாலை வழியாக, அருமனை கிறிஸ்துமஸ் விழா மேடைக்கு வருவதை விழா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருமனை ஸ்டிபன் “அரசியல் டுடே” இடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *