• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் மெகா ஷாப்பிங் திருவிழா

Byவிஷா

Dec 23, 2023

புத்தாண்டை முன்னிட்டு, கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில், இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாபெரும் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் கொடிசியா சார்பாக, அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டு முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஷாப்பிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒன்பதாவது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளின் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் திருவிழாவானது இன்று தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இந்த ஷாப்பிங் திருவிழாவானது சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தேவையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் பரிசுப் பொருட்கள் என அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும்.