• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

58 கால்வாயில் தண்ணீர் திறப்பு அதிமுகவினர் மலர் தூவி வரவேற்பு

ByP.Thangapandi

Dec 23, 2023

உசிலம்பட்டி விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை ஆற்றில் இருந்து 58 ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு விடப்படுவதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று வைகை அணைக்கு சென்று மலர் தூவி 58 ஆம் கால்வாய்க்கு நீரை வரவேற்றனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம் எஸ்.எஸ்.சரவணன் அனில் அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன் பா.வெற்றிவேல் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.ராஜா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளர் I.தமிழழகன் உசிலம்பட்டி நகர கழக செயலாளர் பூமா.கே.ராஜா பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் எழுமலை பேரூர் கழகச் செயலாளர் வாசிமலை கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கலைபிரிவு செயலாளர் சிவசக்தி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.