• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உசிலம்பட்டி சரக காவல்துறை சார்பில், நிவாரண பொருட்கள்..,

ByP.Thangapandi

Dec 20, 2023

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையம், எழுமலை, எம்.கல்லுப்பட்டி, உத்தப்பநாயக்கணூர், செக்காணூரணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பிஸ்கட், அரிசி, பருப்பு, சீனி, தண்ணீர் கேன்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் என சுமார் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை உசிலம்பட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் 407 வாகனத்தில் ஏற்றி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.