• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்..!

Byவிஷா

Dec 20, 2023

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நீர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் நாட்டில் மோசடி செயலிகளின் நிலைப்பாடு குறித்தும் அவற்றின் ஒழுங்கின்மையை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..,
“ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மத்திய அரசு இணைந்து மோசடி கடன் செயலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த ஏப்ரல் 2021 மற்றும் ஜீலை 2022 -க்கு இடைப்பட்ட காலத்தில் 3,500 – 4,000 கடன் செயலிகளின் உண்மை தன்மையானது ஆராயப்பட்டது. அதில் 2,500 மோசடி கடன் செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அவ்வபோது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ரிசர்வ் வங்கி அங்கீகரித்த இந்தியாவின் சட்டப்பூர்வமான செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனத்திடம் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பகிர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த 2,500 போலி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.