• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்..!

Byவிஷா

Dec 20, 2023

தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையின் காரணமாக, அரையாண்டுத் தேர்வுகள் 3 நாட்கள் கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனவரி 2ஆம் தேதிக்குப் பதில், 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையால் மூன்று நாட்களாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி உடன் முடிய விருந்த நிலையில் 3 நாட்கள் கூடுதலாக தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அரையாண்டு விடுமுறை முடிந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.