• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள்…

ByKalamegam Viswanathan

Dec 18, 2023

நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல் கட்டமாக திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, ரூபாய் 50 ஆயிரம் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வட்டாட்சியர் மனேஷ் குமார் தலைமையில், அரிசி, பருப்பு, போர்வை, பாய்,  தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை (ரூ 50 ஆயிரம் மதிப்புடைய) முதல் கட்டமாக லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.