• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

திருமங்கலத்தில் முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம் – நகராட்சி பகுதியில் உள்ள நான்கு வார்டுகளுக்கு முதல்கட்ட முகாம்…

ByKalamegam Viswanathan

Dec 18, 2023
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முதலமைச்சரின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை, நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக்கி வைத்தார்.

திருமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில், முதல் நான்கு வார்டுகளுக்கு மட்டும் இந்த முகாம் நடைபெற்ற நிலையில், இதில் பொதுமக்கள் பங்கு கொண்டனர். பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்து உடனுக்குடன் கணினியில் அந்த மனுவை பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது .
இதில் எரிசக்தி துறை தமிழ்நாடு மின்சார வாரியம் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , ஊரக வளர்ச்சி துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை , சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மக்களிடமிருந்து குறைகளை தீர்ப்பதற்கான மனுக்களை பெற்று வருகின்றனர். இதற்கான தீர்வு விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.