• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

11 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை…

Byமதி

Oct 27, 2021

ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தயான் சந்த் விருது கொடுத்து கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு.

அதன்படி, தடகள வீரர் நீரஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவி தஹியா, ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ், குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைன், கால்பந்து விளையாட்டு வீரர் சுனில் சேத்ரி, பெண்கள் கிரிக்கெட் அணியின் மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், தடகள வீரர் சுமித் ஆன்டில், துப்பாக்கி சுடும் வீரர் அவனி லேகாரா, பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர் மணீஷ் நர்வால் என 11 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதே போல 35 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு.