• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னையில் தண்ணீர் கேன் விலை உயர்வால் மக்கள் அவதி..!

Byவிஷா

Dec 6, 2023

சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீர் கேனின் விலை ரூ.250 ஆக உயர்ந்துள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீரால் சூழ்ந்துள்ளன. குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மினி லாரிகளில் சென்று சிலர் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, 25 லிட்டர் கேன் ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்கின்றனர். வீடுகளில் இருந்து காலி கேன்களை கொண்டு வருபவர்களுக்கு, ரூ.150-க்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.