சென்னையில் மிக்ஜாம் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சரிசெய்ய, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டு சென்றது. சென்னை மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இன்னும் நீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். அரசு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், பாதிப்பை சரிசெய்ய உடனே ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மிக்ஜாம் புயலால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு சொத்துகள் சேதமடைந்துள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு என்ன செய்ய உள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.