• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கனமழை எதிரொலி : செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு..,

Byவிஷா

Nov 27, 2023

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 164 கன அடியில் இருந்து 532 கன அடியாக உயர்ந்துள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,170 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.19 அடியாக உயர்ந்துள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 105 கனஅடியும், உபரி நீராக 25 கன அடியும் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 23 அடியைத் தாண்டியதும் உபரி நீரைக் கூடுதலாகத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.