• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குறிச்சியார்பட்டி காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா.., கேரளா முறைப்படி கும்பாபிஷேகம்..!

ByKalamegam Viswanathan

Nov 26, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் அமைந்துள்ள தெற்கு காளியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா கடந்த 24ம் தேதி வெற்றி கிழமை முதலே யாகசாலை பூஜைகள் தொடங்கி கேரளா ஐயப்பன் கோவில் நம்பூதிரி வகையாரான திருவனந்தபுரந்தை சேர்ந்த ராஜீவ் மாகதேவன் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட நம்பூதிரிகள் மூன்று நாட்களாக சிறப்பு யாக பூஜைகள் செய்து ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கை முன்னிட்டு, அதி காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் கோபுர கலசத்தின் மேல் கலச நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடைபெற்று விசேஷ தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.