• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

தேனூர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்…

ByKalamegam Viswanathan

Nov 23, 2023

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை ரவி பட்டாச்சாரியார் வீரராகவன் தலைமையிலான சிவாச்சாரர்கள் முதலாம் காலயாக பூஜையினை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கினர் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. புதன்கிழமை இரண்டாம் காலயாக பூஜையும் மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை நான்காம் கால யாக பூஜை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி கோ பூஜை பூர்ணாவதியுடன் நிறைவுற்றது. தொடர்ந்து காலை 9 மணி அளவில் கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் அதிர்வெட்டுகள் முழங்க கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டம் இட்டது ‌. தொடர்ந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ லிங்கோத் பவர் ஸ்ரீ நந்தி பகவானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை திருப்பணி விழா குழுவினர் மற்றும் தேனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.