• Fri. May 3rd, 2024

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2023

தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், பேச்சிகுளம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் . ராஜலட்சுமி வாசு , தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்திக் பாண்டி ஆகியோர் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நடராஜ குமார் மற்றும் உதவி இயக்குநர் பழனிவேலு முகாமினை துவக்கி வைத்தனர்.

முகாமில் 500 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை , செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.

கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசியும் , ஆடுகளுக்கு ஆட்க்கொல்லி நோய் தடுப்பூசியும் போடப்பட்டது.

மேலும் சிறந்த கிடரி கன்றுகளுக்கான கன்று பேரணி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறந்த விவசாயிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முகாமில் ஆனையூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். தேன்மொழி , தேற்குவாசல் டாக்டர் கங்காசூடன் ,பொதும்பு டாக்டர். சிந்து, செல்லூர் டாக்டர் . சத்யபிரியா, கால்நடை ஆய்வாளர் கலைவாணி ,.கயல்விழி மற்றும் கால்நடை பரமரிப்பு உதவியாளர் கலாவதி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள்,மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்தனர்

மேலும் முகாமில். பொது மக்களுக்கு கால்நடை வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

சிறந்த முறையில் மழை காலங்களில் கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கால்நடைகள் வளர்ப்பவர்கள் அனைவருக்கும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் எல்லா கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கும்
விவசாய கடன் அட்டை ( Kissan credit card) பெறுவதற்க்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.

இயற்கை பேரிடர் காலம் மற்றும் மழை காலங்களில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது என்ற செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *